ராசிபுரம் சிவராத்திரி உற்சவ விழா அம்மன் ரத ஊர்வலம்
ADDED :3155 days ago
ராசிபுரம்: ராசிபுரம், அங்காளபரமேஸ்வரி அம்மன், ரத ஊர்வலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராசிபுரத்தில், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு, மஹா சிவராத்திரி உற்சவ திருவிழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை, 4:00 மணியளவில், சிவன்
கோவிலிலிருந்து புறப்பட்ட அம்மன் மற்றும் நடராஜர் சுவாமியை ரதத்தில் அமர்த்தி, கடைவீதி வழியாக அழைத்து வந்தனர். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அபிஷேக ஆராதனை, கொடியேற்று விழா நடந்தது.