உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோவில் மண்டல பூஜை: அலைமோதிய பக்தர் கூட்டம்

திருவண்ணாலை அருணாசலேஸ்வரர் கோவில் மண்டல பூஜை: அலைமோதிய பக்தர் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் முடிந்து, மண்டல பூஜை நடந்து வருவதால், நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், கடந்த, 6ல் நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து கோவிலில், 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. கும்பாபி ஷேக விழாவில் சுவாமி தரிசனம் செய்ய முடியாத வெளியூர் பக்தர்கள், தினமும் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள், 50 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் செலுத்தி, ஒரு மணி நேரத்திலும், தர்ம தரிசனத்தை, இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !