வால்பாறை உத்தரகாளியம்மன் கோவில் திருவிழா
ADDED :3207 days ago
வால்பாறை: வால்பாறை அண்ணாநகர் கருப்புசாமி, உத்தரகாளியம்மன், மதுரைவீரன் கோவிலின், 38 ம் ஆண்டு திருவிழா நடந்தது. இக்கோவில் திருவிழா கடந்த, 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த, 17ம் தேதி இரவு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் மற்றும் சக்தி கும்பத்தினை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை அம்மனுக்கு பொங்கல்வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் மீனம்மாள், தர்மகர்த்தா செல்வநாயகி உட்பட பலர் செய்திருந்தனர்.