உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த நாள்

அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த நாள்

புதுச்சேரி: அன்னை பிறந்த நாளை ஒட்டி, புதுச்சேரி அரவிந்தர் ஆசிர மத்தில் உள்ள அவரது சமாதியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.அரவிந்தர் ஆசிரம அன்னையின், 139வது பிறந்த நாளை ஒட்டி, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னை வசித்த அறைகள், பக்தர்களின்தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டன. அன்னையின் சமாதி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று, அன்னையின் சமாதியில் மலர் துாவி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !