ராம்சுரத் குமார் மகராஜின் 16ம் ஆண்டு ஆராதனை விழா
திருக்கோவிலுார்: திருவண்ணாமலையில், பகவான் யோகி ராம்சுரத் குமார் மகராஜின், 16ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று துவங்கியது. காலை, 6:30 மணிக்கு ஹோமம், அதிஷ்டானத்தில் அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. 10:30க்கு, பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பக்தர்கள் பகிர்ந்து கொண்டனர். மாலை, 4:30க்கு சத்குருநாத ஓதுவாரின் தேவார இன்னிசை கச்சேரி, 6:30க்கு ஸ்ரீராம் பரசுராம் குழுவினரின், பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, 6:30 மணிக்கு, மகன்யாசம் மற்றும் அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை, 9:00க்கு, நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், தீர்த்த நாராயண பூஜை நடக்கிறது. பகல், 11:00க்கு, பக்தர்களின் பஜனை, மாலை, 4:30க்கு, குழந்தை சம்பந்தன் என்ற தலைப்பில், திருவாசக உரை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:30க்கு, சங்கரநாராயணன் பரதம், இரவு, 8:00க்கு பகவானின் உற்சவ மூர்த்தியுடன், வெள்ளி ரதத்தில் ஊர்வலம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஆசிரம தலைவர், ஜஸ்டிஸ் அருணாசலம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.