உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை

மஹா சிவராத்திரி சேலம் கோவில்களில் சிறப்பு பூஜை

வீரபாண்டி: சேலம் மாவட்ட சிவன் கோவில்களில், மஹா சிவராத்திரி முன்னிட்டு, இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. சேலம் டவுன், இரண்டாவது அக்ரஹாரம், காசி விஸ்வநாதர் கோவிலில், இன்று அதிகாலை, 5:00 மணிக்கு, முதல் கால பூஜை துவங்குகிறது. காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு, 1008 சங்காபிஷேகம் செய்யப்படும். மாலை, 6:00 மணிக்கு, 108 கலச அபிஷேகம் நடக்கும். இரவு, 10:00 மணிக்கு, 51 கலச அபிஷேகம் நடக்கும். நள்ளிரவு, 12:30 மணிக்கு, முத்தங்கி கவசத்தில், மூலவர் அருள்பாலிப்பார். அதிகாலை, 3:30 மணிக்கு, எட்டாம் கால பூஜையில், 16 கலச அபிஷேகம் முடிந்து, பித்தளை நாகாபரண கவசத்தில், மூலவர் அருள்பாலிப்பார்.

* உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், இன்று மாலை, 4:30 மணிக்கு, பிரதோஷ பூஜை நடக்கும். இரவு, 7:30 மணிக்கு, மகா சிவராத்திரியின் முதல் கால அபிஷேக பூஜை துவங்கி, 10:30, 12:00, அதிகாலை, 4:30 மணிக்கு என, நான்கு கால அபிஷேக பூஜை நடக்கும். இரவு முழுவதும், சிவகாமி கருணாகரன் குழுவினரின், வீணை கச்சேரி நடக்கிறது. மேலும், மூலவருக்கு நடக்கும் அபிஷேகங்களை தரிசனம் செய்ய, கோவில் பிரகாரங்களில், டிவிக்கள் வைத்து, நேரலை செய்யப்படும்.

* ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோவிலில், மாலை, 5:00 மணி முதல், சிறப்பு அபிஷேக பூஜை துவங்கி, இரவு முழுவதும் நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !