உடுமலையில் சப்பரம் எடுத்து செல்லும் விழா
ADDED :3161 days ago
உடுமலை: மகா சிவராத்திரி சிறப்பு விழாவையொட்டி, பூலாங்கிணரிலிருந்து, திருமூர்த்திமலைக்கு பிப்24, சப்பரம் எடுத்து செல்லும் விழா நடந்தது. திருமூர்த்திமலை, அமணலிங்கேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும், மகாசிவராத்திரி நாளன்று, பூலாங்கிணர் கிராமத்திலிருந்து திருசப்பரம் எடுத்து செல்லும் வழிபாடு வழக்கமாக நடக்கிறது. நடப்பாண்டில் சிவராத்திரி சிறப்பு பூஜைக்கு திருசப்பரம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை திருமூர்த்திமலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இவ் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.