உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் மாவட்டம் முழுவதும் மஹா சிவராத்திரி விழா

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மஹா சிவராத்திரி விழா

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மஹா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்செங்கோடு தாலுகா, மோளிப்பள்ளி அண்ணமார் சுவாமிகோவிலில் சிவராத்திரி விழா நடந்ததது. கடந்த, 14 மாலை தேர் புண்யாகவாசனம், 22ல் கிராம சாந்தி, 23ல் கொடியேற்றம் நடந்தது. சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பிப்24, இரவு, 10:00 மணிக்கு சிவராத்திரி விழா துவங்கியது.

*ராசிபுரம், தர்மசம்னர்தின சமேத கைலாசநாதர் கோவிலில் நடந்த விழாவில், பஞ்சகவ்ய பூஜை, பஞ்ச கவ்ய ஹோமம், வேதபாராயணம், சுவாமி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு நான்கு கால சிறப்பு பூஜை நடந்தது. இன்று காலை லிங்கோத்பவர் சுவாமிக்கு சிறப்பு அ பிஷேகம், அம்பாளுடன் நகர் வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

*புதுச்சத்திரம் அடுத்த, கடந்தப்பட்டியில் முதல் உலகத்து ஆதிசிவனார் உடனுரை அதர்வன வேத மாரியம்மன் கோவிலில் பிப்25, காலை, 18ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. பிப்26, நந்தவன பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வம் நடக்கிறது. நாமக்கல், பள்ளிபாளையம், குமாரபாளையம், ப.வேலூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்பட மாவட்டத்தில், சிவன் கோவில்களில், சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !