உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலதெய்வ கோயில்களில் சிவராத்திரி வழிபாடு

குலதெய்வ கோயில்களில் சிவராத்திரி வழிபாடு

ஸ்ரீவில்லிபுத்துார்: மகாசிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்துார் பகுதி குல தெய்வ கோயில்களில் திரளான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், செண்பகதோப்பு பேச்சியம்மன்கோயில், மாயாண்டிபட்டி பத்ரகாளியம்மன்கோயில், கம்மாபட்டி இருளப்பசாமி கோயில், பெரியமாரியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டார கிராமக்கோயில்களில் பிப்24, காலை முதல் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு பஜார் வீதிகள் காலை முதல் பரபரப்பாக காணப்பட்டது. அதிகளவு கார்கள், வேன்கள் சென்றதால் நகருக்குள் கடும்போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. பூ, தேங்காய், மாலைகள் மற்றும் பூஜைபொருட்கள் விற்பனை சூடுபிடித்திருந்தது. தேனி, மதுரை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குவிந்ததால், அப்பகுதியிலிருந்து வரும் பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஸ்ரீவி.டவுன் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !