உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

திருப்பூர் : திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில் நடந்த, பொதுத்தேர்வு எழுதும் மாவ, மாவியருக்கான ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் கூட்டு வழிபாடு நேற்றுடன் நிறைவு பெற்றது.

திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், பொதுத்தேர்வு எழுதும் மாவர்களுக்கு, நினைவாற்றம், தன்னம்பிக்கையும், வெற்றியும் வழங்க பிரார்த்தித்து, ஆண்டுதோறும் ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, கூட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. நான்காவது வாரமாக, நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாவ, மாவியருக்கான கூட்டு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு யாக பூஜை, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, 16 வகையான திரவியங்களில் திருமஞ்சனம், நாம சங்கீர்த்தனம், சாற்றுமறை மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. கூட்டு வழிபாட்டில் பதிவு செய்த மாவ, மாவியரும், பெற்றோரும், கலந்துகொண்டு, பஜனையுடன் வழிபட்டனர்.மாவர்களுக்கு, ஹயக்கிரீவர் திருவுருவப்படம் மற்றும் "ஸ்லோகம் அச்சிட்ட வண் அட்டையும், திருமஞ்சன பொடி, குங்குமம், அர்ச்சனை மலர், பென்சில் பாக்ஸ், "இங்க் பேனா, பென்சில், ரப்பர், "ஷார்ப்னர், "ஸ்கேல், கூடிய எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை பொறுப்பாளர்கள், மாவர்களின் கூட்டு வழிபாடு, பஜனைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கடந்த, நான்கு வாரங்களில் நடந்த கூட்டு வழிபாட்டில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று வழிபட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.லட்சுமி ஹயக்கிரீவர் கூட்டு வழிபாட்டில் பங்கேற்று வழிபட்டதால், தேர்வு பயம் நீங்கியுள்ளதாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, இறையருள் கிடைத்துள்ளதாகவும், மாவ, மாவியர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !