உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

உடுமலை கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு, அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். திருமூர்த்திமலையில், அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதம்தோறும், அமாவாசை தினத்தன்று, சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தவிர, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். நேற்றும், அமாவாசை தினத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சின்னாறு அருகே உள்ள கோடந்துார் கட்டளை மாரியம்மன் கோவிலிலும் சிறப்புப் பூஜை நடத்தப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோவிலில், வார நாட்களில் செவ்வாய், வியாழன், ஞாயிறு தினத்தன்றும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், எலுமிச்சை பழம் வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !