உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் சிவராத்திரி வழிபாடு நிறைவு

சதுரகிரி மலையில் சிவராத்திரி வழிபாடு நிறைவு

வத்திராயிருப்பு;சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி வழிபாடு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா பிப். 24 ல் துவங்கியது. அன்று அதிகாலை முதல் மலைப்பாதை திறந்து விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மலைக்கு தினமும் சென்றுவந்தனர். அன்று இரவு முதல் பிப் 25 வரை இருநாட்கள் சிவராத்திரி வழிபாடு நடந்தது. திறப்பு விழா

வெம்பக்கோட்டை: சிவகாசி வாட்டர் டேங்க் அருகில் பெண்களுக்கான புதிய ஆடையகம் ரிதம் கலெக்சன்ஸ் திறப்பு விழா முன்னாள் எம்.எல்.ஏ., ராஜகோபால் தலைமையில் நேற்று நடந்தது. ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை யூனியன் முன்னாள் சேர்மன் பெருமாள்சாமி வரவேற்றார். அய்யன் குழும இயக்குநர் வைரப்பிரகாசம் திறந்து வைத்தார். மீரா வைரப்பிரகாசம், டாக்டர் ரெங்கலட்சுமி, ஸ்ரீஹரி வெங்கடேஸ்வரா பேப்பர் மில் இயக்குநர் சந்திரா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றினர். பி.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சோலைசாமி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பி.எஸ். ஆர். கல்வி நிறுவன இயக்குநர் விஜயலட்சுமி சோலைசாமி முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார்.நிகழ்ச்சியில் சீனிவாசன், நாராயணசாமி, ரகுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். உரிமையாளர்கள் சீனிவாசன், வெங்கடேஸ்வரி ஆகியோர்
நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !