உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரி கோவிலில் யாகபூஜை

ராஜராஜேஸ்வரி கோவிலில் யாகபூஜை

குன்னுார் : குன்னுார் அருகே, ஆர்செடின் பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பூஜையை, குன்னுார் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற தலைவி பிரபாவதி துவக்கி வைத்தார். பூஜைகளை பூசாரி மகேந்திரன் தலைமையில் ஊர் பொதுமக்கள் செய்தனர். இதில், சிறப்பு வழிபாடு, தீபாராதனை, பிரசாத வினியோகம், அபிஷேக ஆராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. விழாவில், ஆர்செடின், பம்பளகம்பை, நான்சச் எஸ்டேட், உலிக்கல் மந்து உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !