உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானச்சூறை திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானச்சூறை திரளான பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று நடந்த மயானச்சூறை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி, பழைய பஜார் தெருவில், அங்காள பரமேஸ்வரி கோவிலில், மயானச்சூறை பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. மதியம், உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் அலகு குத்தி டிராக்டரில் உற்சவர் அம்மனை ஊர்வலமாக ஆறுமுக சுவாமி கோவில் அருகே சுடுகாட்டிற்கு இழுத்துச் சென்றனர். அங்கு அரசுனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அங்கு குவிந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மன் மீது சுண்டல், கொழுக்கட்டை வீசி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதே போல், திருத்தணி அடுத்த, எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மயானச்சூறை நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !