சோழவந்தான் கோயில்களில் சிவராத்திரி பாரிவேட்டை
தேனுார் : தேனுார்,சோழவந்தான் பகுதி கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை,சிறப்பு வழிபாடுகளில் பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசித்தனர். தேனுார் நிலவதிகருப்பசாமி கோயில்,ஆதிசிவன் கோயில்களில் சிவராத்திரியை ஒட்டி நடந்த பாரிவேட்டை நிகழ்ச்சியில் பாரம்பரிய சாமி பெட்டியை பக்தர் சுமந்தும், சக்திகரகம்எடுத்து வர, சாமிஆடி ஊர்வலமாக கோயில் வந்தனர். அங்கு பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள், கிடாவெட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பலமாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். சோழவந்தான் மேலதெரு அங்காள ஈஸ்வரியம்மன் ஆதிவாலகுருநாதசுவாமி கோயில், சின்னக்கடைவீதி சொர்ணமாலீஸ்வரர் பொன்னம்பலத்தார் சுவாமி கோயில்களில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். பெண்கள் நெய்மாவிளக்கேற்றி, வாழைப்பழ பூஜைகள் செய்து அருள்பெற்றனர்.