உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராசிபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

ராசிபுரம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையம், ராசிபுரம் பகுதியில், மஹா சிவராத்திரி விழா முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. குமாரபாளையம் அடுத்த குளத்துக்காடு பகுதியில் உள்ள மயான வளாகத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில், சிவராத்திரி அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, தீர்த்தக்குட ஊர்வலம், அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து, மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பக்தர்கள் காளி வேடமிட்டு கோழி, குட்டி ஆடு ஆகியவற்றை, தன் வாயால் கடித்து ரத்தத்தை குடித்தனர்.

* ராசிபுரம், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு, நேற்று பூமிதி திருவிழா நடந்தது. ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையம் நாகம்மாயம்மன், காமாட்சியம்மன், அங்காளம்மன், பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, திருத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பொங்கல் விழா மற்றும் திருத்தேர் பவனி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !