உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளிக்கு புலிப்பல் தாலி!

காளிக்கு புலிப்பல் தாலி!

கண்ணகியுடன் மதுரை புறப்பட்ட கோவலன், வழியில் காளி கோவில் ஒன்றில் தங்கினான். அங்கு வந்த பக்தர்கள், ஒரு கன்னிப்பெண்ணை காளி தேவி போல் அலங்கரித்து வழிபட்டனர். அந்தப் பெண்ணின்  விரிந்த கூந்தலை பொன்னிற பாம்புக்குட்டி ஒன்றால் இழுத்துக் கட்டினர். அதன் மீது  காட்டுப்பன்றியின் கொம்பை  மூன்றாம் பிறை போல செருகினர். புலிப்பற்களைக் கோர்த்து தாலியாக அணிவித்தனர். புலித்தோலை ஆடையாக உடுத்தி, அப்பெண்ணை கலைமானின் மீது அமரச் செய்தனர். அவள் முன் படையல் வைத்து பூத்துõவி, நறுமணப்புகை இட்டனர்.  இந்த பூஜை முறையை  இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் விவரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !