கண்டாச்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா
ADDED :3147 days ago
கண்டாச்சிபுரம்: ஒதியத்துார் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. நேற்று அதிகாலை 12:30 மணியளவில், பொதுமக் கள் தேரை வடம் பிடித்தனர். முன்னதாக நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் திருத்தேர் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.