உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடரமண சுவாமி நாளை தெப்ப திருவிழா

வெங்கடரமண சுவாமி நாளை தெப்ப திருவிழா

கரூர்: தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், மாசி மக திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா நாளை துவங்குகிறது. வரும், மார்ச், 3ல் கொடியேற்றம், 4 முதல், நாள்தோறும் காலை பல்லக்கு ஊர்வலம், இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 11 அன்று காலை, 8:30 மணியளவில், தேரோட்ட விழாவும், 13 அன்று, மாலை, 6:30 மணிக்கு தெப்பத்தேர் உற்சவமும், 20ல் ஊஞ்சல் உற்வசமும் நடக்கிறது. ஏற்பாடுகளை, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரியநாராயணன், இணை ஆணையர் கல்யாணி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !