நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பாய்மரம் ஏற்றும் வைபவம்
ADDED :3148 days ago
நாகப்பட்டினம், நாகூர் தர்கா கந்தூரி விழா, மினவராக்களில் பாய்மரம் ஏற்றும் வைபவத்துடன் துவங்கியது.நாகை அடுத்த, நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் தர்காவின், 460வது ஆண்டு கந்தூரி விழா, 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வாக, மார்ச் 9 இரவு, நாகையில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு, 10ம் தேதி, தர்காவில் சந்தனம் பூசும் வைபவம், 13ம் தேதி, கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. கந்தூரி விழா துவக்க நிகழ்ச்சியாக, நேற்று அதிகாலை, 6:30 மணிக்கு, தர்கா பரம்பரை கலிபா சாஹிப் துவா ஓதிய பின், தர்காவின், ஐந்து மினவராக்களில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.