ஜல்லிக்கட்டு காளைக்கு சிலை அமைத்து கோயில்
ADDED :3148 days ago
மேலுார்: மேலுார் மில்கேட் பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல். சிறுவயது முதல் ஜல்லிக்கட்டு காளையை சொக்கம்பட்டி காரி என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அண்ணன் நினைவாக அவரது தம்பி சந்திரசேகர் காளையை வளர்த்து வந்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி காசு மற்றும் பரிசுகளை வாங்கி குவித்தது.கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் காளை இறந்தது. சந்திரசேகர் மொட்டை போட்டு இறுதி சடங்குகளை செய்தார். காளை இறந்து ஓராண்டு ஆன நிலையில் 2 லட்சம் ரூபாய் செலவில் கோயில் கட்டி, அதில் காளை சிலை அமைத்து நேற்றுமுன்தினம் முதல் சந்திரசேகர் குடும்பத்தினர் வழிபட்டு வருகின்றனர்.