திருப்பதி யாத்திரைக்கு முன்பதிவு வரவேற்பு
கோவை : ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் மார்ச், 1ம் தேதி கோவை வழியாக திருப்பதிக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவுகள் வரவேற்கப்படுகின்றன. இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.,) சார்பில் வரும் மார்ச், 1ம் தேதி திருப்பதிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து காலை புறப்படும் இந்த ரயில் ஈரோடு, சேலம் வழியாக மாலை போத்தனுார் ஸ்டேஷன் வந்தடைகிறது. சில மணி நேரங்களுக்கு பின்னர், திருப்பதி புறப்படுகிறது. திருப்பதி பாலாஜி, திருச்சானுார் பத்மாவதி மற்றும் தென்னக கயிலாயம் என பிரசித்திபெற்ற காலஹஸ்தியையும் பயணிகள் தரிசிக்கலாம். ஐந்து நாட்கள் கொண்ட இந்த யாத்திரைக்கு ஒரு நபருக்கு, 4,360 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விபரங்கள் மற்றும் முன்பதிவுக்கு, 90031 40655 என்ற எண்ணிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம. இத்தகவலை, ஐ.ஆர்.சி.டி.சி., கூடுதல் பொது மேலாளர்(சுற்றுலா) ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.