உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் வரும் 12ல் தேரோட்டம் நடத்த ஏற்பாடு

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் வரும் 12ல் தேரோட்டம் நடத்த ஏற்பாடு

ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், வரும், 12ல் தேர்த்திருவிழா நடப்பதை முன்னிட்டு, பால்கம்பம் நடப்பட்டு, தேர் கட்டும் பணி நடந்து வருகிறது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீதுள்ள சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். இக்கோவில் தேர்த்திருவிழாவின் போது, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என, மூன்று மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, வரும், 6ல் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 12 காலை நடக்கிறது. இதற்காக, கோவிலுக்கு சொந்தமான, மூன்று தேர்களையும் கட்டும் பணி, கடந்த, 9ல் பால்கம்பம் நடப்பட்டு துவங்கியது. தேர் கட்டும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வரும், 6ல் விழா துவங்கி, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 11 இரவு, சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் திருக்கல்யாணம், 12ல் தேரோட்டம், 15ல் தெப்ப உற்சவம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !