உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவிலில் இன்று பொங்கல் விழா

காளியம்மன் கோவிலில் இன்று பொங்கல் விழா

ஆட்டையாம்பட்டி: காளியம்மன் கோவிலில், இன்று பொங்கல் விழா நடக்கிறது. ஆட்டையாம்பட்டி, காளியம்மன் கோவிலில், மாசி மாதம் முன்னிட்டு, இன்று பொங்கல் விழா நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து, காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். 8:00 மணிக்கு மேல், பொங்கல் வைபவம் நடக்கும். மாலை, சர்வ அலங்காரத்தில் காளியம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி, இருசனம்பட்டி காளியம்மன் கோவிலில், பொங்கல் விழா, கடந்த, 25ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாளை காலை, 6:00 மணிக்கு, சக்தி கரகம், பால்குட ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து, காலை, 9:00 மணிக்கு மேல், பொங்கல் வைபவம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !