உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த கந்தமலை பக்தர்கள்!

நத்தம் மாரியம்மன் கோயில் விழா: தீர்த்தம் எடுத்த கந்தமலை பக்தர்கள்!

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிவை முன்னிட்டு பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்தனர். கடந்த பிப்.,27 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் சுற்றுப்பகுதியை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் கோயிலில் தீர்த்தம் எடுத்தனர். நத்தம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கரந்தமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை சந்தனக்கருப்பு கோயிலில் ஒன்று சேர்ந்த பக்தர்கள் அங்கிருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோயிலுக்கு சென்றனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். நேற்று முதல் தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா செல்வார். மார்ச் 12 ல் பால்குடம் எடுக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 14 அன்று பூக்குழி இறங்குதல் மற்றும் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் பூப்பலக்குடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !