முருகய்யனார் கோயிலில் சிவராத்திரி விழா
ADDED :3147 days ago
நரிக்குடி: நரிக்குடி அருகே வீரக்குடி முருகய்யனார் திருக்கோயில் சிவராத்தி விழா ஐந்து நாட்கள் நடந்தது. கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவன்று மாலை கணபதி ஹோமம், இரவு ருத்ரா அபிஷேகம், சங்கா அபிஷேகம் நடந்தது. மறுநாள் அதிகாலை வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்துடன் முருகன் புறப்பாடு நடந்தது. நேற்று சிறப்பு சந்தன காப்பு அலங்காரம், தீபராதானை நடந்தது. பல்வேறு கிராம பக்தர்கள் கரகமாடி சுவாமி பெட்டி எடுத்து வந்தனர். பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் செல்வராணி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.