அங்காளம்மன் கோயிலில் பால்குட விழா கோலாகலம்
ADDED :3147 days ago
பரமக்குடி;பரமக்குடி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன், வாணிக்கருப்பண சுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை, பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் சிவராத்திரி விழா கடந்த பிப்., 22ல் காப்புகட்டுடன் துவங்கியது. 24ல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 26ல் பாரி வேட்டை நடந்தது. நேற்று பால்குடம் விழா நடந்தது. காலை 9.45 மணிக்கு ’சக்தி’ கோஷம் முழங்க ஆயிரகணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பவுர்ணமி வழிபாட்டு குழுவினர், ஓம்சக்தி மன்றத்தினர் செய்திருந்தனர்.