காளியம்மன் கோவிலில் இன்று பூமிதி திருவிழா
ADDED :3144 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம், காளியம்மன் கோவில் மாசித்திருவிழா மிகவும் பிரசித்தமானது. இந்தாண்டு விழா, கடந்த, 14ல் துவங்கியது. நேற்று காலை, 10:00 மணிக்கு தேர்கலசம் வைத்தல், இரவு, 8:00 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து அம்மன் சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. இன்று காலை, 6:00 மணிக்கு மகா குண்டம் பூ மிதித்தல், 10:00 மணிக்கு பொங்கல் வைத்தல், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கின்றன. நாளை காலை, 8:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம், 10:00 மணிக்கு தேர் திருவிழா, இரவு, 7:00 மணிக்கு வண்டி வேடிக்கை நடக்கிறது. வரும், 3 காலை, 10:00 மணிக்கு தேர் நிலை அடைதல் வைபவம், இரவு, 7:00 மணிக்கு வாண வேடிக்கை, 9:00 மணிக்கு காளியம்மன் அலங்கார திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் உள்பட பலர் செய்து வருகின்றனர்.