உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 10ல் தேரோட்டம் நடக்கிறது. கொடியேற்றம்: அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறப்பு 1:30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. கோயில் பிரகாரத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் காலை 5:43 க்கு கொடியேற்றம் நடந்தது. பின் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மகா தீபாரtதனை நடந்தது.தேரோட்டம்: மார்ச் 8 ல், காலை 5:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில், வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி வீதியுலா. பகல் 11:30 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. மார்ச் 10 ல், காலை 6:30 முதல் 7:00 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதி வலம் வருகிறது. மார்ச் 11 ல் இரவு 7:00 மணிக்கு பூச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது.

திருச்செந்தூர் மாசித்திருவிழா விபரம்:

மார் 02ம் தேதி: சுவாமி சிங்ககேடய சப்பரம் அம்மன் சின்ன பல்லக்கு
மார் 03ம் தேதி: சுவாமி தங்கமுத்துகிடா வாகனம் அம்மன் வெள்ளி அன்ன வாகனம்
மார் 04ம் தேதி: சுவாமி வெள்ளியானை வாகனம் அம்மன் வெள்ளிசரப வாகனம்
மார் 05ம் தேதி: குடவரை வாயில் தீபாராதனை சுவாமி அம்மன் தங்கமயில் வாகனம்
மார் 06ம் தேதி: சுவாமி வெள்ளித்தேர் அம்மன் இந்திர விமானம்
மார் 07ம் தேதி: சண்முகப்பெருமான் சிவப்பு சாத்தி
மார் 08ம் தேதி: சண்முகப்பெருமான் பச்சை சாத்தி
மார் 09ம் தேதி: சுவாமி அம்பாள் பல்லக்கில் பவனி
மார் 10ம் தேதி: விநாயகர் சுவாமி அம்பாள் திருத்தேர்
மார் 11ம் தேதி: தெப்பம் தேர்
மார் 12ம் தேதி: மஞ்சள் நீராட்டுத் திருக்கோலம் சுவாமி அம்பாள் மலர்கேடய சப்பரத்தில் உலாதிருவிழா நிறைவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !