புடவைக்காரி அம்மன் முப்பூஜை திருவிழா
ADDED :3138 days ago
வையப்பமலை: வையப்பமலைபுதூரில், புடவைக்காரி அம்மனுக்கு, முப்பூஜை நடக்கிறது. திருச்செங்கோடு தாலுகா, வையப்பமலைபுதூரில், பழமை வாய்ந்த புடவைக்காரி அம்மன், வீரகாரன் கோவில் குல தெய்வ முப்பூஜை திருவிழா நேற்று துவங்கியது. நாளை வரை நடக்க உள்ளது. நேற்று இரவு அம்மன் ஆலயத்துக்கு சக்தி அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. இன்று இரவு, 12:00 மணிக்கு பொங்கல் வைத்தல், வீரகாரன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். நாளை அதிகாலை, 3:00 மணிக்கு கன்னி மார் அழைத்தல், 5:00 மணிக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலியிடுதல், 8:00 மணிக்கு வீரகாரன் கோவிலிருந்து, வீட்டு கோவிலில் குடி புகுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.