உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

அவிநாசி;கருவலூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்.,7ல் துவங்குகிறது; 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.அவிநாசி அருகே, கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, ஏப்.,7ம் தேதி, கிராம சாந்தி உற்சவத்துடன் துவங்குகிறது. 8ம் தேதி, கொடியேற்றம், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் காட்சி நடக்கிறது. 9ம் தேதி பூத வாகன காட்சி, 10ம் தேதி, ரிஷப வாகன காட்சி நடக்கிறது. 11ம் தேதி, மலர் பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம், யானை வாகன காட்சி நடக்கிறது. அடுத்த மாதம், 12ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, அம்மன் தேருக்கு எழுந்தருளி, அருள்பாலிக்கிறார். மாலை, 2:00க்கு, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மூன்று நாட்கள் தேரோட்டம் நடக்கிறது. 15ம் தேதி, பரிவேட்டை, குதிரை வாகன காட்சி, தெற்ப உற்சவம், காமதேனு வாகன காட்சி நடக்கிறது. 16ம் தேதி, அம்மன் சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீர், அன்ன வாகன காட்சியும், 19ம் தேதி மறு பூஜை, பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனையுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !