காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியல் வசூல் ரூ.57 லட்சம்
ADDED :3508 days ago
நகரி: காணிப்பாக்கம் விநாயகர் கோவில் உண்டியலில், கடந்த, 21 நாட்களில், பக்தர்கள், 57 லட்சம் ரூபாயை, காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 21 நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோவில் அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், பணத்தை பிரித்து எண்ணினர். இதில், 57,00,873 ரூபாய் ரொக்கம், 158 வெளிநாட்டு நாணயங்கள் இருந்தன.