உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோமநாத ஈஸ்வரர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்

சோமநாத ஈஸ்வரர் கோவிலில் வரும் 9ல் கும்பாபிஷேகம்

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, கல்யாணகிரி, தேன்மலை ஸ்ரீசோமநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், வரும், 9ல் நடக்கிறது. இதையொட்டி, வரும், 8 காலை, 9:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, காப்பு கட்டுதல், மாலை, 3:00 மணிக்கு புனித தீர்த்தம், மேளவாத்திய ஊர்வலம், 5:00 மணிக்கு பஞ்ச கவ்ய பூஜை, திருக்குடங்கள் யாக சாலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 7:00 மணிக்கு முதல் கால யாக பூஜை துவங்கும். அடுத்தநாள் காலை, 6:00 மணியளவில், விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி, சூர்ய, சோம பூஜை, சுவாமிகளுக்கு உயர்கலை ஏற்றுதல் நடக்கிறது. 9:00 மணிக்கு, கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை, தேன்மலை சித்தர் குருஜி தங்கராஜி சுவாமிகள், அடியார்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !