மேல்பட்டாம்பாக்கத்தில் 31ம் தேதி சூரசம்ஹாரம்!
ADDED :5134 days ago
கடலூர் : மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா வரும் 31ம் தேதி நடக்கிறது. கடலூர் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது. வரும் 30ம் தேதி மாலை முருகன் சக்தி வாங்குதல் நிகழ்ச்சி, 31ம் தேதி காலை மகா அபிஷேகம், மாலை 5 மணிக்கு கம்பம் ஏறுதல், இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலாவை தொடர்ந்து சூரசம்ஹார விழா நடக்கிறது. 1ம் தேதி காலை கொடி இறக்கப்படுகிறது. மாலை திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதியுலா, 2ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.