உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜர் ஜெயந்தி ரத யாத்திரை

ராமானுஜர் ஜெயந்தி ரத யாத்திரை

குமாரபாளையம்: ராமானுஜர், 1,017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தார். இவர் ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படுகிறார். மனித பிறவிகளாக பிறந்த அனைவரும் சமம். பெருமாள் பக்தர்களுக்கு இனம், வேறுபாடுகள் இல்லை என்பதை வலியுறுத்தினார். இவர் அவதரித்து, 1,000 ஆண்டுகள் ஆனதையொட்டி, குமாரபாளையத்தில் அவரது பக்தர்கள் ரத யாத்திரை நடத்தினர். ராஜம் தியேட்டர் முன்பிருந்து துவங்கிய ஊர்வலம் காளியம்மன் கோவில் வளாகத்தை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !