உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாளுடன் கருடன் அமர்ந்தது ஏன்?

ஆண்டாளுடன் கருடன் அமர்ந்தது ஏன்?

ஸ்ரீவில்லிபுத்துõரில் ஆண்டாளுக்கும், பெருமாளுக்கும் திருமண ஏற்பாடு நடந்தது. முகூர்த்தநேரம் நெருங்கியும் மணமகனான பெருமாள் வரவில்லை. ஆண்டாள் கருடாழ்வாரை உதவிக்கு அழைத்தாள். பெருமாளை உடனே அழைத்து வர வேண்டும். இந்த உதவிக்காக பெருமாளின் பக்கத்தில் நான் அமரும் போது உன்னையும் அருகில் இருக்கச் செய்து பெருமைப்படுத்துவேன்,” என்று வாக்களித்தாள். மகிழ்ச்சியுடன்  கருடன் ஸ்ரீரங்கம் நோக்கி விரைந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் பெருமாளைத் தோளில் தாங்கியபடி வந்து சேர்ந்தார். திருமணமும் குறித்த  நேரத்திற்குள் சிறப்பாக நடந்தது. கைகொடுத்த கருடனைப் பெருமைப்படுத்தும் விதத்தில்  ஸ்ரீவில்லிபுத்துõர் கோவில் கருவறையில் ஆண்டாள், பெருமாள் இருவருடன் கருடாழ்வார்  சேர்ந்து வீற்றிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !