மொல்லாவைத் தெரியுமா?
ADDED :3144 days ago
தெலுங்கு ராமாயணங்களில் மொல்லா என்னும் பெண் புலவர் எழுதியது மொல்லா ராமாயணம். மொல்லா என்றால் முல்லைப்பூ. கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில், வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று இடம் பெற்றுள்ளது. சீதையுடன் காட்டுக்குச் சென்ற ராமர் ஓடக்காரனான குகனிடம், படகில் ஏற்றிக் கொண்டு கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார். ராமர் மீது மிகுந்த பக்தி கொண்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. “சுவாமி....தங்களின் பாதத்துõசு பட்டு கல்லும் அழகிய பெண்ணாக மாறியது. அது போல என் படகும் பெண்ணாகி விட்டால் பிழைப்புக்கு என்ன செய்வேன்?” என்று கேட்டான். ராமரின் பாதத்தில் சிறு துõசு கூட இல்லாமல், கங்கை நீரால் கழுவும்படி வேண்டினான். ராமரும் அதன்படியே கால்களைக் கழுவி விட்டு படகில் ஏறினார்.