உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுங்கையூர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொடுங்கையூர் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கொடுங்கையூர்: கண்ணதாசன் நகரில், காமாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை, கவியரசு கண்ணதாசன் நகரில், காமாட்சி அம்மன் ஆலயம் உள்ளது. இக்கோவிலின் ராஜ கோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஊர் பொதுமக்களின் நன்கொடை மூலம், 25லட்சம் ரூபாய் செலவில் ஆலய திருப்பணிகள் மேற்கொள்ள பட்டது. பணிகள் நிறைவுற்றதை அடுத்து, கடந்த , 3ம் தேதி, விநாயகர் பூஜை, கோ பூஜை , நவகிரகபூஜை , ஹோமங்களும்; மாலை, முதல்கால பூஜை, சோம கும்பபூஜை , பிரவேசபலி, ம்ருத்சங்கிரஹணம், கலாகர்ஷணம், பூர்ணா ஹூதியும்; இரவு, கோபுர கலசம் மற்றம் பிம்ப ப்ரதிஷ்டை நடைபெற்றன. நேற்று முன்தினம், இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜைகள் மற்றும் தத்வார்ச்சனை, நாடி சந்தானம், பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றன. நேற்று காலை, நான்காம் கால பூஜையை த�ொ டந்து, 6:15 மணிக்கு ராஜ கோபுரம் மற்றும் விமான கலசங்களுக்கு, வேதமந்திரங்கள் முழங்க, புனித நீர் ஊற்றபட்டு, மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. அப்போது, சிவனடியார்கள் சங்கநாதம் முழங்கினர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள், ‘ஓம் சக்தி பராசக்தி’என, விண்ணதிர முழங்கினர். அதை தொடர்ந்து, மூல மூர்த்திகள்,பரிவார மூர்த்திகள்மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை நடை பெற்றது. இரவு, வான வேடிக்கை மற்றும் சகல வாத்தியங்கள் முழங்க, சுவாமி திருவீதி உலாவுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !