சூரசம்ஹார விழா: நெல்லை திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்!
ADDED :5134 days ago
சென்னை: சூரசம்ஹார விழாவையொட்டி, நெல்லை திருச்செந்தூர் இடையே தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதன்படி, அக்டோபர் 31ம் தேதி, திருச்செந்தூரில் இருந்து காலை 9.20 மற்றும் 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்கள் முறையே, 10.45 மற்றும் மதியம் 1.10 மணிக்கு நெல்லை சென்றடையும். மறு மார்க்கத்தில், மதியம் 12 மற்றும் 2 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் முறையே, மதியம் 1.30 மற்றும் 3.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். திருச்செந்தூரில் இருந்து மாலை 6 மணிக்கு கிளம்பும் வண்டி எண் 56766 திருச்செந்தூர் நெல்லை பாசஞ்சர் 31ம் தேதி மட்டும் 6.30 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.