உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரம்பாக்கம் பகுதி கோவில்களில் கும்பாபிஷேகம்

பேரம்பாக்கம் பகுதி கோவில்களில் கும்பாபிஷேகம்

புதுப்பட்டினம்;வாயலுார், பேரம்பாக்கம் பகுதியில், விநாயகர் கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.கல்பாக்கம் அடுத்த, வாயலுாரில், பழமையான கற்பக விநாயகர் கோவில்கள் உள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடந்த நிலையில், தற்போது திருப்பணிகள் மேற்கொண்டு புதுப்பிக்கப்பட்டது. இதன் அருகில், சாய்பாபா கோவிலும், தற்போது புதிதாக அமைக்கப்பட்டது.கல்பாக்கம் அடுத்த, பேரம்பாக்கத்தில், பழமையான செல்வ விநாயகர் கோவிலிலும், திருப்பணிகள் மேற்கொண்டு புதுப்பிக்கப்பட்டது. இக்கோவில்களின் மகா கும்பாபிஷேகம், நேற்று காலை நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !