பழநி மாரியம்மன் கோயிலில் குவிந்த கேரள பக்தர்கள் அக்னி சட்டி நேர்த்திக்கடன்
பழநி: மாசித்திரு விழாவைமுன்னிட்டு பழநி மாரியம்மன் கோயிலில் கேரள பக்தர்கள் அக்னிசட்டிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலநுாறு ஆண்டுகளுக்கு முன் பழநியில் இருந்து கேரள மாநிலம் சென்ற பக்தர்கள், ஆண்டுதோறும் பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்தாண்டு மாசித் திருவிழாவில் கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், கர்நாடக மாநிலம் குடகு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி வந்தனர். அவர்கள் வையாபுரிகுளம் அருகே படிப்பாறை காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிச்சட்டி எடுத்து வந்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல பழநி கிராம மக்களும் பலர் பால்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்து வந்தனர். வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பாதவிநாயகர் கோயிலில் இருந்து பூச்சொரிதல் ரத ஊர்வலம் நடந்தது.