விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் மாசித் தேரோட்டம் கோலாகலம்
ADDED :3451 days ago
விருத்தாசலம் விருத்தாகிரீஷ்வரர் மாசிமக உற்ச்சவத்தையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம்பிடத்து இழுத்தனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினசரி பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடத்து இழுத்தனர்.