திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கைபார நிகழ்ச்சி
ADDED :3245 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி 5ம் நாள் திருவிழாவான நேற்று கைபாரம் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டன் எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருள, பக்தர்கள் கைகளில் தலைக்குமேல் வாகனத்தை துாக்கிச் சென்றனர். பின், பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 13ல் உத்திரம், மார்ச் 15ல் பட்டாபிஷேகம், மார்ச் 16ல் திருக்கல்யாணம், மார்ச் 17ல் தேரோட்டம், மார்ச் 18ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.