உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழா

அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழா

மேலுார்: மேலுார் அருகே அம்பலகாரன்பட்டியில் உள்ள வல்லடிகாரர் சுவாமி கோயில் திருவிழா நேற்று துவங்கியது. காலையில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்பலகாரன்பட்டி, அ.புதுப்பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த காளைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடு பிடிவீரர்கள் கலந்து கொ ண்டனர். மாலையில் சுவாமிக்கு பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் திருக்கல்யாணம் நடந்தது. இன்று மதியம் (மார்ச்10) கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வாண வே டிக்கையை தொடர்ந்து வெ ள்ளலுார் நாட்டை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்படும். மாலை வெள்ளி ரதத்தில் சுவாமிகள் உலாவும், நாளை தேரோ ட்டமும், பின் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !