மதுரை சித்திரை திருவிழா : மக்களின் கருத்து கேட்பு
ADDED :3142 days ago
மதுரை: மதுரைமீனாட்சி அம்மன் கோயில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவின் 8ம் நாளில் வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார், சுவாமி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரை திருவிழா ஏப்.,28 முதல் மே 9 வரை நடக்கிறது. மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் மே 7 ல் நடக்கிறது. சித்திரை திருவிழா சிறப்பாகவும், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படுத்தவும் மக்கள் தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை http://info@maduraimeenakshi.org’ என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.