திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்தேரோட்டம் கோலாகலம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சுவாமி குமரவிடங்கப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்துார் முருகன் கோயில் மாசித்திருவிழா, மார்ச் முதல் தேதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். தேரோட்டம்: இன்று காலை 6:30 முதல் 7:00 மணிக்குள் விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி, பக்தர்கள் வடம் பிடிக்க ரத வீதி வலம் . திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை இரவு 7:00 மணிக்கு பூச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடக்கிறது. மார்ச் 12 ல் மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா நிறைவு பெறுகிறது.