உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

லட்சுமி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

நாமக்கல்: நாமக்கல்லில், லட்சுமி குபேர ஷீரடி சாய்பாபா கோவிலின் கும்பாபிேஷகம் நடந்தது.நாமக்கல், சுவாமி நகர், மூன்றாவது கிராசில் உள்ள சற்குரு நகரில், லட்சுமி குபேர ஷீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று சாய்பாபாவின் முழு உருவ பளிங்குச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் காலை, 5:30 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. காலை, 9:00 மணிக்கு மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. அன்று மாலை, 5:00 மணிக்கு விக்னேஷ்வர வழிபாடு, மகா சங்கல்பம், கோபுர கலசம் வைத்தல் போன்ற பூஜைகள் நடந்தன. இரவு, 9:30 மணிக்கு யந்திர ஸ்தாபனம், சுவாமியின் பளிங்குச்சிலை பிரதிஷ்டை நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவு பெற்றன. புனிதநீர் எடுத்துச்செல்லப்பட்டு, காலை, 8:00 மணிக்கு கோவில் கோபுரத்துக்கும், தொடர்ந்து, 8:20 மணிக்கு சாய்பாபா திருவுருவச்சிலைக்கும் கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை அகில உலக ஷீரடி சாய்பாபா தர்ம அறக்கட்டளை குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !