கோட்டை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED :3152 days ago
கொடுமுடி : கொளாநல்லி கோட்டை மாரியம்மன் திருவிழாவில் தேரோட்டம் நடந்தது. கொடுமுடி வட்டாரம், நஞ்சை கொளாநல்லி கோட்டை மாரியம்மன் தேர்த்திருவிழா கடந்த, பிப்., 28ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது. இதில், நுாற்றுக்கணக்கான ஆண், பெண், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். இன்றிரவு வான வேடிக்கையும், கோவில் முன் உள்ள காவிரி ஆற்றில், தெப்ப உற்சவமும் நடக்கிறது.