இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் தேரோட்டம்
                              ADDED :3157 days ago 
                            
                          
                           மதுரை: மதுரை இம்மையிலும் நன்மைதருவார் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மேலமாசி வீதி இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சிவபெருமான் தனது ஆத்மலிங்கத்தை இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து அதை தானே பூஜை செய்வது வேறெங்கும் இல்லாத சிறப்பு. இங்கு மாசிப்பெருவிழா கடந்த 1ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திருக்கல்யாணம் 9ம் தேதிநடைபெற்றது.இன்று(10ம் தேதி) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் மத்தியபுரி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும், இம்மையிலும் நன்மைதருவார் பிரியாவிடைபுடனும் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.