உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்லல் சோமசுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்

கல்லல் சோமசுந்தரேஸ்வரர் கோயில் தேரோட்டம்

கல்லல்: கல்லல் சோமசுந்தரேஸ்வரர் - சவுந்திரநாயகி அம்மன் கோயில் மாசி திருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுடன் தொடங்கியது. விழாவையொட்டி சுவாமி அம்பாளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். கடந்த 7-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு,எட்டாம் திருவிழாவான நேற்று முன்தினம் திருக்கல்யாணம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது. நேற்று காலை  9:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, மாலை தேரோட்டம் நடந்தது. 6:30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இன்று காலை தீர்த்தவாரி, மதியம் மகா அபிேஷகம், சப்தாவர்ணம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, கொடியிறக்கம் நிகழ்ச்சி மற்றும் மஞ்சுவிரட்டு நடக்கிறது.  சவுந்திரநாயகி அம்மன் தேரை சிறுவர்கள் இழுத்து வந்தனர்.வடக்கு வீதியில் தேர் வந்த போது, வடம் வழுக்கியதால் சிறுவர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். இதில் தேர் சக்கரம் ஏறி கல்லல் இந்திரா நகரை சேர்ந்த கவுதம்,11, படுகாயம் அடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !